கழிவு நீர் குழியில் விழுந்த 2 1/2 வயது குழந்தை உயிரிழப்பு

 
c

தோண்டப்பட்டு வைத்திருந்த கழிவுநீர் குழியில் தவறி விழுந்த இரண்டரை வயது குழந்தை மூச்சு திணறி  பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது.

பெங்களூருவில் மாகடி சாலையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த தம்பதி வசித்து வந்துள்ளனர்.   இவர்களுக்கு 2 1/2 வயதில் கார்த்திக் என்ற மகன் இருந்திருக்கிறான்.  இவர்கள் வசித்து வந்த வீட்டின் அருகே குடிநீர், கழிவு நீர் வடிகால் வாரியம் சார்பில் வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகிறது.   இதற்காக அப்பகுதியில் குழாய் பதிப்பதற்காக பெரிய குழி தோண்டப்பட்டு இருந்திருக்கிறது .

u

 அந்த குழியில் திடீரென்று தண்ணீர் நிரம்பி இருக்கிறது.   வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தவறி அந்த குழிக்குள் விழுந்திருக்கிறான்.   இதை யாரும் பார்க்காததால் குழியில் விழுந்த அந்த சிறுவன் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறான்.   விளையாடச் சென்று குழந்தை காணவில்லை என்று பல இடங்களில் பெற்றோர் செடி பார்த்து இருக்கிறார்கள்.

 பின்னர் அருகே இருந்த குழியில் சென்று பலரும் பார்த்தபோதுதான்  குழந்தையின் உடல் மிதந்து இருக்கிறது.  இதை பார்த்து கதறி அழுத தம்பதி குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள்.  அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர் .

அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் அலட்சியத்தால் குடிநீர் வாரிய குழி மூடாமல் இருந்ததால் இந்த சம்பவம் ஏற்பட்டு இருப்பதால் போலீசில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.