22 மத்திய பல்கலைக்கழகங்கள் CUET - PG தேர்வை ஏற்க மறுப்பு - யுஜிசி

 
ugc ugc

மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் CUET - PG தேர்வை 22 மத்திய பல்கலைக்கழகங்கள் ஏற்க மறுத்துவிட்டாதாக யுஜிசி தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் M.A., M.Sc., M.Com., உள்ளிட்ட முதுகலை படிப்புகளில் சேர இதுவரை தனித்தனி நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், வரும் கல்வியாண்டு முதல் ஒரே நுழைவுத் தேர்வாக CUET - PG என்ற பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று UGC அறிவித்தது. இதையடுத்து வரும் கல்வியாண்டில் PG மாணவர் சேர்க்கைகாக, CUET - PG தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்து, அதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவையும் UGC தொடங்கியது.

cuet

இந்நிலையில், இந்தியாவில் உள்ள 54 மத்திய பல்கலைக்கழகங்களில் டெல்லி JNU, புதுச்சேரி பல்கலைக்கழகம், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் உள்ளிட்ட 32 மத்திய பல்கலைக்கழகங்கள் மட்டுமே CUET - PG தேர்வின் படி மாணவர் சேர்க்கையை நடத்த உள்ளதாகவும், 22 மத்திய பல்கலைக்கழகங்கள் CUET - PG தேர்வை வரும் கல்வியாண்டில் ஏற்க மறுத்துள்ளதாகவும், இனிவரும் காலங்களில் 22 பல்கலைக்கழகங்களும் CUET - PGதேர்வை ஏற்கும் என்று நம்புவதாகவும் UGC தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். CUET - PG தேர்வுக்கு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும் பல்கலைக்கழகங்களும் அதை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.