தெலங்கானாவில் மற்றொரு தனியார் பயணப் பேருந்து தீப்பிடித்தது
தெலங்கானாவில் மற்றொரு தனியார் பயணப் பேருந்து தீப்பிடித்தது. டிரைவர் எச்சரிக்கையால் 29 பயணிகள் ஜன்னல் கண்ணாடியை உடைத்து தப்பினர்.

ஆந்திர மாநில என்.டி.ஆர். மாவட்டம் விஜயவாடா - ஐதராபாத் நெடுஞ்சாலையில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தின் சித்யாலா மண்டலத்தின் வேலிமினேடு என்ற இடத்தில் 'விஹாரி' தனியார் பயணப் பேருந்தில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது. டிரைவர் உடனடியாக பயணிகளை எச்சரிக்கை செய்ததால் பேருந்தில் இருந்த 29 பயணிகள் ஜன்னல்களை உடைத்து வெளியே குதித்தனர். பின்னர், பேருந்து முற்றிலுமாக எரிந்தது. தகவல் கிடைத்ததும், தீயணைப்புப் படை வீரர்கள் அங்கு வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சமீபத்தில் கர்னூலில் வி. காவேரி பேருந்து தீப்பிடித்து 19 பேர் உயிருடன் எரிந்தனர். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த சம்பவத்தில் பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட புதிய செல்போன்கள் அடங்கிய பார்சல் காரணமாக தீப்பிடித்த சில நொடிகளிலேயே வெடிகுண்டை போன்று செயல்பட்டு சில விநாடிகளில் பேருந்து முழுவதும் அதிக வெப்பத்துடன் இறந்ததால் பலர் உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்தது.


