தெலங்கானாவில் 7 வயது சிறுவன் உள்பட 3 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி..

 
omicron variant

தெலங்கானாவில் 7 வயது சிறுவன் உள்பட 3 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்புக்கு ஆளானவர்களில் ஒருவர் மாயமாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..

உலக அளவில்  ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  டெல்டா வைரஸ்களை விட 5 மடங்கு அதிகமாக பரவும் தன்மை கொண்டது  என்றும் , தடுப்பூசிகளின் வீரியத்தை குறைத்து பரவக்கூடியது என்றும்  உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.  உயிரிழப்புகள் ஏற்படாமல் இதுவரை ஆறுதல் அளித்து வந்த சூழலும் மாறி., இங்கிலாந்தில் முதல் ஒமைக்ரான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

ஒமைக்ரான்

இந்தியாவை பொறுத்தவரை  கடும் கட்டுப்பாடுகளை மீறி ஒமைக்ரான் வேகமாக ஊடுருவி வருகிறது.  நாடு முழுவதும் இதுவரை ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  53 ஆக அதிகரித்துள்ளது.  ஏற்கெனவே மகாராஷ்டிராவில் 20  , ராஜஸ்தானில் 13, டெல்லியில் 6  ,குஜராத்தில் 4, சண்டிகரில் 1, கர்நாடகாவில் 3, பஞ்சாப்பில்  1,  கேரளாவில் 1 மற்றும் ஆந்திராவில் 1 என ஒமிக்ரான் தொற்றின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50 ஆக இருந்தது.

ஒமைக்ரான் கொரோனா

இந்நிலையில் தற்போது தெலங்கானா மாநிலத்தில் கென்யா மற்றும்  சோமாலியாவில் இருந்து வந்த  2 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.  அதேபோல் அபுதாபியில் இருந்து ஹைதராபாத், ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையம் வந்த 7 வயது சிறுவனுக்கும் கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.  அதில் கென்யாவில் இருந்து வந்த பெண்ணும், சோமாலியாவில் இருந்து வந்தவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  அம்மாநில சுகாதாரத்துறை அமைச்ச ஹரிஷ் ராவ் தெரிவித்துள்ளார்.


மேலும் 7 வயது சிறுவன் உள்நாட்டு விமானம் மூலம்  மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிற்கு சென்றுள்ளார்.   சிறுவனுக்கு தொற்று உறுதியாகியிருப்பது குறித்து அம்மாநில அரசுக்கு , தெலங்கானா அரசு தகவல் தெரிவித்திருக்கிறது. மேலும் சோமாலயாவில் இருந்து வந்த நபர் மாயமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.