மணிப்பூர் வன்முறையில் தாய் மகன் உட்பட 3 பேர் உயிரோடு எரித்துக் கொலை!

 
Manipur

மணிப்பூர் வன்முறையில் தாய் மகன் உட்பட 3 பேர் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மேதேயி சமுதாய மக்கள் பட்டியலின அந்தஸ்து கோரி போராடி வருகின்றனர். இதனையடுத்து இதுகுறித்து மத்திய அரசுக்கு பரிந்துரைக்குமாறு மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  அதன்படி மைதேயி சமுக மாணவர் சங்கம் சார்பில் கடந்த 3ம் தேதி பேரணி நடைபெற்றது.  ஆனால் மைதேயி சமூகத்தினரை பட்டியலின பிரிவில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து பேரணியை குறுக்கிட்டனர். அப்போது ஏற்பட்ட மோதலில் வெடித்த வன்முறை மாநிலம் முழுவதும் பரவியது.  இந்தக் கலவரத்தில் இதுவரை 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  இதையடுத்து, ராணுவம், அசாம் ரைபிள்ஸ் படையினர், சிஆர்பிஎப் வீரர்கள் வர வழைக்கப்பட்டு வன்முறை கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது அங்கு படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதனிடையே, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த இரு தினங்களுக்கு முன்பாக மணிப்பூர் சென்று ஆய்வு நடத்தினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மணிப்பூர் அரசு, ஒன்றிய அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் வன்முறையில் தாய் மகன் உட்பட 3 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயம் அடைந்த 8 வயது பழங்குடியின சிறுவன், அவரது தாயார் மற்றும் இன்னொரு உறவினர் ஆகிய 3 பேர் ஆம்புலன்சில் சென்று கொண்டு இருந்தனர். போலீஸ் பாதுகாப்புடன் தான் அந்த ஆம்புலன்ஸ் சென்றுகொண்டிருந்த நிலையில், திடீரென வழிமறித்த ஒரு கும்பல் அவர்களை யார் என்று விசாரித்து பின்னர் அந்த ஆம்புலன்ஸுக்கு தீ வைத்துள்ளது. இதில் 3 பேரும் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.