ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை!

 
kashmir kashmir

புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் 3 பேரை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றது. 

கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி ஜம்மு-காஷ்மீர் அருகே பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தது. இந்தியா நடத்திய இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இதேபோல் ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. 

இந்த நிலையில், புல்வாமாவில் 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் 3 பேரை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றது. ஷோபியன் மாவட்டத்தின் கெல்லார் பகுதியில் கடந்த 13ம் தேதி லஷ்கர் ஏ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், 48 மணி நேரத்தில் மேலும் 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.