சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து - வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 4 பேர் பலி

 
cylinder blast cylinder blast

ஆந்திர மாநிலத்தில், அதிகாலை நேரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 4 பேர் பலி உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் முலக்கலேது முலக்கலேது கிராமத்தை சேர்ந்த ஜானி பாய் என்பவரது வீட்டில் ஜானி பாய், அவருடைய மகன் தாடு, மருமகள் சர்புனி, பேரன் பெரோஸ் ஆகியோர் வழக்கம்போல் தூங்கி கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டின் சமையலறையில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென்று வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வீடு கடும் சேதம் அடைந்த நிலையில் அங்கு தூங்கி கொண்டிருந்த 4 பேரும் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக மரணமடைந்தனர். இந்த சம்பவத்தில் அருகில் உள்ள இரண்டு வீடுகளும் சேதமடைந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் சிலிண்டர் விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உயிரிழந்த 4 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 4 பேர் பலி உயிரிழந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.