லாரியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி

 
kashmir

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகல் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் சித்ரா நகரில் இருந்து காஷ்மீர் நோக்கி லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. இதனிடையே அந்த லாரியில் சந்தேகப்படும் நபர்கள் சிலர் பயணம் செய்வதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த லாரியை தீவிரமாக கண்காணித்து வந்த பாதுகாப்பு படை வீரர்க்ள் ஜம்முவின் தவி நகர் பாலத்தில் இன்று காலை 7.30 மணியளவில் வந்த லாரியை மறித்து சோதனை செய்தனர். அப்போது, லாரிக்குள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள்,  திடீரென பாதுகாப்பு படையினர் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியோட முயற்சித்தனர். இதையடுத்து, லாரியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். 

இதனால் அந்த பகுதியே போர்க்களமாக மாறியது. இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற இந்த துப்பாக்கிசண்டையானது சில மணி நேரங்கள் நீடித்தது. இந்த மோதலில் பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். லாரியை ஒட்டி வந்த டிரைவர் தப்பியோடிய நிலையில், அவரை தேடும் பணியை பாதுகாப்பு படையினர் துரிதப்படுத்தியுள்ளனர்