திருப்பதி மலைக்கு சென்றுவிட்டு திரும்பிய போது விபத்து - 4 பேர் பலி!
ஆந்திர மாநிலத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆந்திர மாநிலம் சத்சாய் மாவட்டம் பாலசமுத்திரம் அருகே சாலையோரத்தில் லாரி ஒன்றி நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திருப்பதி மலைக்கு சென்ற சிலர் ஒரு வேனில் அந்த வழியாக வந்துள்ளனர். அதிவேகமாக வந்த வேன் சாலையோரம் லாரி நிற்பது அறியாமல் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் வேன் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், அதில் பயணித்தவர்களுக்கு பலத்த அடி ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் இந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்த நிலையில், அவர்கள் உடனடியாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து தொடர்பாக குடிபண்டா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பதி மலைக்கு சென்றுவிட்டு திரும்பியவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


