குளத்தில் மூழ்கி 4 மாணவர்கள் பரிதாப பலி - 2பேர் உயிருடன் மீட்பு

 
and

நீச்சலடிக்க தெரியாததால் குளத்துக்குள் மூழ்கி 4 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  இரண்டு மாணவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.   பிரகாசம் மாவட்டத்தில் நடந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 ஆந்திர மாநிலத்தில் பிரகாசம் மாவட்டம் .  இம்மாவட்டத்திலுள்ள குளம் ஒன்றில் ஆறு மாணவர்கள் நீச்சலடித்து குளிப்பதற்காக சென்றிருக்கிறார்கள்.   கோடை வெயிலில் குளத்தில் இறங்கியம் இதமாக  இருந்ததால் அவர்கல் வெகு நேரம் குளத்தில் குளித்துக் கொண்டிருந்திக்கிறார்கள்.

wa

 பின்னர் நீச்சலடிக்க வேண்டும் என்ற ஆவலில், குளத்தின் கரையில் இருந்து  ஆழமான இடத்தில் குதித்திருக்கிறார்கள்.  அப்போது நீரின் ஆழம் அவர்களே உள்ளே இழுக்கவும் நீச்சல் தெரியாததால் சிக்கிக்கொண்டு காப்பாற்றும்படி உதவி கேட்டு கதறி இருக்கிறார்கள் . 

மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை காப்பாற்ற முயன்றுள்ளனர்.   நீச்சல் தெரிந்த சிலர் குழத்திற்குள் குதித்து அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.   இரண்டு மாணவர்களை அவர்கள் உயிருடன் மீட்டு கரைக்கு மேலே கொண்டு வந்துள்ளனர்.   மற்ற 4 மாணவர்களை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.  அவர்கள் நீரின் ஆழத்திற்கு சென்று விட்டனர்.  இதன் பின்னர் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் அந்த நாலுபேரை உயிருடன் மீட்கமுடியவில்லை.  அவர்களின் உடல்களை மட்டுமே மீட்க முடிந்திருக்கிறது.

அப்புரி ஹரி, சிந்தலா கவுசிக், மட்டினேனி சுப்ரமணியம், முன்னாங்கி சிவாஜி ஆகிய  நான்கு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.