மணிப்பூர் மாநிலத்தில் பதுங்கி இருந்த 4 பயங்கரவாதிகள் கைது!

 
terrorists

மணிப்பூர் மாநிலத்தில் 4 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மணிப்பூரில் குக்கி பழங்குடியினர் மற்றும் மெய்தி இனத்திற்கும் கடந்த மே மாதம் முதலே மோதல் போக்கு ஏற்பட்டு வந்த நிலையில் வன்முறை வெடித்தது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், குக்கி சமூகத்தை சேர்ந்த  இரண்டு பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ கூடுதல் அதிர்ச்சியை கிளப்பியது. இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் 4 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மணிப்பூர் மாநிலத்தின் தலைநகரான இம்பால் மற்றும் விஷ்ணுபூர் மாவட்டங்களில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசார் மற்றும் ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் மற்றும் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த தேடுதல் வேட்டையில் மொத்தம் 4 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து 6 துப்பாக்கிகள், 5 தோட்டாக்கள் மற்றும் 2 வெடிபொருட்களை பறிமுதல் செய்யப்பட்டன.