ஜம்மு கஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

 
kashmir kashmir

ஜம்மு கஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் 4 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி ஜம்மு-காஷ்மீர் அருகே பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தது. இந்தியா நடத்திய இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இதேபோல் காஷ்மீரில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனரா என தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. 

இந்த நிலையில், ஜம்மு கஷ்மீரில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் 4 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு கஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சைஃபுல்லா, ஃபர்மான், ஆதில் மற்றும் மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் என நான்கு பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு ஜம்மு கஷ்மீர் காவல்துறை தலைக்கு 5₹ லட்சம் சன்மானம் அறிவித்திருந்தது குறிப்பிடதக்கது.