"400 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!!

 
ttn

400 வந்தே பாரத் ரயில்கள்  அறிமுகப்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

2022-23ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.  பட்ஜெட்  தாக்கலுக்கு முன் டெல்லியில் இன்று காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை  சந்தித்தார். பிறகு மத்திய பட்ஜெட் தாக்கலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர் வருகை புரிந்ததை தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

nirmala

பட்ஜெட் தாக்கலில் ரயில்வே, தொழில்துறை, கல்வி என பல்வேறுதுறைகளுக்கான அறிவிப்பை வெளியிட்டார். குறிப்பாக மேக் இன் இந்தியா திட்டம் மூலம் 60 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டம், எண்ணெய் வித்துகள் இறக்குமதியை குறைக்க உள்நாட்டிலேயே எண்ணெய் வித்து உற்பத்தி அதிகரிப்பு, நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு, மாநில மொழி கல்வி ஊக்குவிக்கப்படும்,  ரூ.44 ஆயிரம் கோடியில் நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும்,இயற்கை விவசாய முறை ஊக்குவிக்கப்படும் என பல முக்கிய அம்சங்களை பட்டியலிட்டார்.

ttn

இந்நிலையில் அடுத்த 3 ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரயில் நிலையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.சிறு, குறு விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்வதற்காக,  ரயில்வே மூலம் புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று அறிவித்த அவர், அடுத்த 3 ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரயில் நிலையங்கள் அமைக்கப்படும் என்று கூறினார். அத்துடன் மெட்ரோ அமைப்புகளை உருவாக்க 100 பிரதமர் கதி சக்தி சரக்கு டெர்மினல்கள் அடுத்த 3 ஆண்டுகளில் உருவாக்கப்படும் என்றும்  2,000 கி.மீ. தொலைவுக்கு ரயில்வே கட்டமைப்பு மேம்பாடு செய்யப்படும் என்றும் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.