டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 410 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்னும் இத்தனை நாட்களே இருக்கு..

 
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 410 காலிப்பணியிடங்கள்..  விண்ணப்பிக்க இன்னும் இத்தனை நாட்களே இருக்கு..

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  காலியாக உள்ள 410 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ்  (All India Institute of Medical Sciences - AIIMS) எனப்படும்  எய்ம்ஸ் மருத்துவமனையில்  சீனியர் ரெசிடென்ட் மற்றும் டெமான்ஸ்ட்ரேட்டர்களுக்கான வேலைவாய்ப்பு  அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.  இதில் தகுதியுடைய மற்றும்  ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மே 16ம் தேதிக்குள்  விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் கீழ் மொத்தம் 410 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெயலலிதா பெயர்: அமைச்சர் உதயகுமார் கோரிக்கை

துறை :  மருத்துவம்.

பணியிடம் : டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை

மொத்த பணியிடங்கள் : 410  

பணி விவரம்:   அனஸ்தீசியாலஜி, பெயின் மெடிசின் மற்றும் கிரிட்டிகல் கேர்,  ஓன்கோ- அனஸ்தீசியாலஜி,  நியூரோ-அனஸ்தீசியாலஜி,  ரேடியோ-டயாக்னசீஸ் மற்றும் இண்டர்வென்ஷ்னல் ரேடியோலஜி ,  கார்டியோவாஸ்குலர் ரேடியாலஜி மற்றும் எண்டோவாஸ்குலர் இண்டர்வென்ஸ்,   எமெர்ஜன்சி மெடிசின் ,  டெர்மடோலஜி மற்றும் வெனிரியாலஜி,  நியூரோஇமேஜிங் மற்றும் இன்டர்வென்ஷனல் நியூரோ-ரேடியாலஜி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிரப்பப்படவுள்ளன.  

சங்கத் தலைவர் சஸ்பெண்ட்.. எய்ம்ஸ் செவிலியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்..
 
கல்வித்தகுதி:  அங்கிகரிக்கப்பட்ட  பல்கலைக்கழகத்தில் இருந்து  அனஸ்தீசியாலஜி பெயின் மெடிசின் மற்றும் கிரிட்டிகல் கேர் பிரிவில்  முதுகலை மருத்துவப் பட்டம்,  ஓன்கோ. அனஸ்தீசியாலஜி பிரிவில்  முதுகலை மருத்துவப் பட்டமும் ,    பால்லியேடிவ் மெடிசின் பிரிவில் முதுகலை மருத்துவப் பட்டம்  பெற்றிருக்க வேண்டும்.  மேலும் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கலாம்.  

ஊதியம்  விபரம்  :   மெடிக்கல் விண்ணப்பதாரர்களுக்கு - பே மேட்ரிக்ஸின் நிலை 11-இன் படி  என்ட்ரி-பே உடன் ரூ. 67,700/-
நான்-மெடிக்கல் விண்ணப்பதாரர்களுக்கு - பிஎச்டி உடன் எம்எஸ்சி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.56,100/-  
மெடிக்கல் பிசிக்ஸ்-இல் சீனியர் டெமான்ஸ்ட்ரேட்டர் பதவிக்கு, (எம்எஸ்சி படித்தவர்கள்) ரூ.12090 + ரூ.4200  

விண்ணப்பிக்க கடைசி தேதி  : 16.05.2022

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் முழு விவரங்களுக்கு அதிகாரபூர்வமான இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்..