அதிர்ச்சி! ஒரே வாரத்தில் 44 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி

 
Corona

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஒரே வாரத்தில் சுமார்  44 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. முதல் அலை மற்றும் இரண்டாவது அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில், தடுப்பூசி காரணமாக மூன்றாவது அலை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இறப்பு விகிதமும் குறைவேகவே இருந்தது. இந்நிலையில், டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

india corona

குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு  கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகம் பரவி வருகிறது. நொய்டாவில் கடந்த 7 நாட்களில் 44 க்கும் அதிகமான குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நோய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாநில சுகாதாரத்துறை சார்பில் வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருமல், சளி, காய்ச்சல் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே குழந்தைகளை பரிசோதித்து சிகிச்சை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மூன்று அலைகள் முடிந்துள்ள நிலையில், டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் தொற்று அதிகரித்து வருவது 4-வது அலையின் தொடக்கமாக இருக்குமோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.