இந்திய நிலக்கரி நிறுவனத்தில் 481 பணியிடங்கள்..

 
இந்திய நிலக்கரி நிறுவனத்தில் 481 பணியிடங்கள்..

இந்தியா நிலக்கரி நிறுவனத்தில் தற்போது  481  காலிப்பணியிடங்களுக்கான  அறிவிப்பு வெளியாகி உள்ளது.  இந்திய நிலக்கரி நிறுவனம் (Coal India Limited) என்பது  மேற்கு வங்காளம், கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்திய அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனம்.  இந்தியாவின் நிலக்கரி உற்பத்திக்கு ஏறத்தாழ 85% பங்களிப்பை வழங்குவது இந்த நிறுவனமாகும்.  ஏறத்தாழ 3,97,000 ஊழியர்கள் இந்திய நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர்.   இந்த நிலையில் தற்போது  இந்தியா நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள 481  பணியிடங்களை நிரப்புவதற்கான  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விருப்பமும், தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்..  

 இந்திய நிலக்கரி நிறுவனத்தில் 481 பணியிடங்கள்..
நிறுவனம்     : இந்தியா நிலக்கரி நிறுவனம்  ( Coal India Limited)
வேலையின் பெயர்    : Management Trainee
மொத்த காலிப்பணியிடம்     - 481  
விண்ணப்பிக்க ஆரம்பத் தேதி   -  08-07-2022 : 10.00 AM
விண்ணப்பிக்க கடைசித் தேதி  -   07-08-2022 : 11.59 PM
தேர்வு செய்யப்படும் முறை - கணினி வழி ஆன்லைன் தேர்வு (  Computer Based Online Test)
 வயதுத் தகுதி  -   30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இந்திய நிலக்கரி நிறுவனத்தில் 481 பணியிடங்கள்..
கல்வித் தகுதி -   அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில்  ஏதேனும் ஒரு பட்டம், முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்..   ( குறிப்பு : பொறியியல் பட்டப்படிப்பு வழக்கமான முழு நேர படிப்பாக இருக்க வேண்டும்.)
பணி அனுபவம் - குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் தேவை
சம்பளம்  -  ₹. 50,000 – 1, 60,000/- சம்பளம் .. ( பயிற்சி காலத்தில்  ₹. 50,000 ரூபாயும் -   ஒரு வருடத்திற்கு பிறகு தேர்வில் தேர்ச்சி பெற்றால் ₹.60,000 – 1, 80,000/-ம் வரை  வழங்கப்படும் )
விண்ணப்ப கட்டணம்  -  விண்ணப்ப கட்டணமாக ₹. 1000/-  மற்றும்   GST யோடு சேர்த்து ₹. 1180/-  செலுத்த வேண்டும் .  SC / ST / PwD / ESM candidates / கோல் இந்தியாவில் பணிபுரிபவர்கள் கட்டணம்  இல்லை..
விண்ணப்பிக்கும் மற்றும் கட்டணம் செலுத்தும் முறை -  ஆன்லைன்
இந்த பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்தியா நிலக்கரி நிறுவனம்  ( Coal India Limited)அதிகாரப்பூர்வ பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்