கார் மீது லாரி மோதி 5 பேர் பலி! திருமணத்திற்கு புத்தாடை வாங்க சென்றபோது சோகம்

 
accident accident

திருமணத்திற்கு ஐதராபாத் சென்று புத்தாடை வாங்கி கொண்டு காரில் வந்தபோது ஆந்திர மாநிலம் அனந்தபுரில் கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாகினர்.

5 killed as car rams truck in Andhra Pradesh village - India Today

ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில்  உள்ள ராணிநகரை சேர்ந்த  ஷேக் சுரோஜ் பாஷாவிற்கு இந்த மாதம் 27 ம் தேதி  திருமணம்  நடக்கிறது. இதற்காக திருமண ஆடைகள் வாங்க குடும்பத்தினர் 7 பேருடன் ஐதராபாத் சென்றார். புத்தாடைகளை வாங்கி கொண்டு மீண்டும் அனந்தபுருக்கு காரில் வந்து கொண்டுருந்தனர். 

இந்நிலையில் இவர்கள் கார் அனந்தபுரம் மாவட்டம் குத்தி அருகே தேசிய நெடுஞ்சாலை  காலை வந்து கொண்டுருந்தபோது குத்தியில் இருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள ராயல் தாபா என்ற இடத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து டிவைடரில் மோதியது. அதே நேரத்தில் அனந்தபுரில் இருந்து ஐதராபாத் நோக்கி சென்ற லாரி கார் மீது மோதியது. இந்த விபத்தில், மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  மேலும் இருவர் குத்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது whatsapp சேனலை Follow செய்யுங்கள்:

இந்த சம்பவம் குறித்து குத்தி இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமிரெட்டி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.  கார் ஓட்டுநர் தூக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டதாகத் போலீசார் சந்தேகிக்கின்றனர்..  இந்த விபத்தில்  அல்லி சாஹேப் (58), ஷேக் சுரோஜ்பாஷா (28), முகமது அயன் (6), அமன் (4), ரெஹானா பேகம் (40) ஆகியோர் இறந்தனர். இந்த விபத்தில் வழக்குபதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.