ஒடிசாவில் சரக்கு ரயில் மோதி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதி

 
goods train

ஒடிசாவில் சரக்கு ரயில் மோதியதில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது. 

கடந்த ஜூன் 2 ஆம் தேதி ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா ரயில் நிலைய பகுதியில் 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சுமார்  275 பேர் உயிரிழந்தனர்.  இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதன் பின்னர்  இரண்டு ரயில் பாதைகளில் சீரமைப்பு பணி நிறைவடைந்து மீண்டு ரயில்கள் இயங்க தொடங்கின. இந்த சூழலில் நேற்று இரவு மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியில் எரிவாயு ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது.  இந்நிலையில் ஒடிசாவின் ஜாஜ்பூர் சாலை ரயில் நிலையத்தில் புதன்கிழமை சரக்கு ரயில் மீது மோதியதில் நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர். கியோன்ஜாரில் பலத்த மழை பெய்ததால் சரக்கு ரயிலின் கீழே தொழிலாளர்கள் மழைக்காக ஒதுங்கி இருந்தனர். ரயிலுக்கு அடியில் தொழிலாளர்கள் அமர்ந்து இருப்பதை அறியாத ஓட்டுநர் சரக்கு ரயிலை இயக்கியதால் அதில் சிக்கி 4 தொழிலாளர்கள் பலியாகினர்.

இந்நிலையில், ஒடிசாவில் ஜஜ்பூரில் மழை காரணமாக ரயிலுக்கு கீழே ஒதுங்கிய நபர்கள், ரயில் புறப்படுவது கூட தெரியாமல் அதன் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தது தொடர்பாக,  உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது.