கேரளா குண்டுவெடிப்பு - அவதூறு கருத்து பதிவிட்டதாக 54 வழக்குகள் பதிவு!

 
bomb blast

கேரளா குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, மத வன்முறையை தூண்டும் விதமாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டதாக 54 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கேரள மாநிலம், எர்ணாகுளம் களமச்சேரி என்ற இடத்தில் ஜெபக்கூட்டம் நடைபெற்றிருக்கும்போது மூன்று வெடிகுண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 2000க்கும் மேற்பட்டோர் பங்கு கொண்ட இடத்தில் நடைபெற்ற வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் காரணமாக 36 பேர் படுகாயம் அடைந்தனர். 3 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர். இந்த விவகாரம் தொடர்பாக கேரள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய டொமினிக் மார்ட்டின் கொடக்கரா காவல் நிலையத்தில் சரணடைந்தார். சபையின் செயல்பாடு தனக்கு பிடிக்கவில்லை என்பதால் குண்டுவைத்ததாக மார்ட்டின் வாக்குமூலம் அளித்தார். 

இந்த நிலையில், கேரளா குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, மத வன்முறையை தூண்டும் விதமாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டதாக 54 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மலப்புரம் மாவட்டத்தில் 26 வழக்குகளும், எர்ணாகுளம் மாவட்டத்தில் 15 வழக்குகளும் பதிவாகியுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.