லாரியின் பின்னால் மோதிய கார் - 2 வயது குழந்தை உட்பட 6 பேர் பலி

 
Car accident Car accident

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வந்த கார் அதிவேகமாக மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 வயது குழந்தை உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து ராஜமுந்திரி நோக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் ஒரு காரில் சென்றுகொண்டிருந்தனர். இந்த நிலையில், அந்த கார் முன்னாள் சென்ற லாரியின் பின்னால் அதிவேகத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்த கார் அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் அந்த காரில் பயணம் செய்தவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

இந்த விபத்தால் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில், விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கார் மற்றும் லாரியை அந்த சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வந்த கார் அதிவேகமாக மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 வயது குழந்தை உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.