உலகின் அதிக மாசடைந்த தலைநகரம் - அபாய கட்டத்தில் டெல்லி

 
air pollution delhi

உலகின் மிகவும் மாசுபட்ட தலைநகரங்களுக்கான பட்டியலில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக டெல்லி 2வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டை விட மாசுபாடு கிட்டத்தட்ட 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இங்குள்ள காற்று மாசுபாட்டின் அளவு உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த பாதுகாப்பு வரம்புகளை விட கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகமாக உள்ளது. பி.எம்.2.5 காற்றில் உள்ள துகள்களின் சராசரி ஒரு மீட்டர் கனசதுரத்திற்கு 5 மைக்ரோகிராம்களுக்கு குறைவாக இருக்க வேண்டும் அதுவே காற்று மாசுபாட்டுக்கான பாதுகாப்பான வரம்பு என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

1uv6uv7o

COURTESY - NDTV

இந்நிலையில் சுவிஸ் நிறுவனமான IQAir வெளியிட்ட உலகக் காற்றுத் தர அறிக்கையின்படி, 2021ஆம் ஆண்டு உலகின் மிகவும் காற்று மாசுபட்ட தலைநகரங்களில் பட்டியலில் இந்தியாவின் புதுடெல்லி உள்ளது. உலகின் அதிக காற்றுமாசுபாட்டை கொண்ட நாடாக வங்காள தேசம் உள்ளது. அதிக மாசு அடைந்த நகரங்களின் பட்டியலில் ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லி, பஞ்சாப்,ஹர்யானா ஆகிய மாநிலங்கள் உள்ளன. உலகம் முழுவதும் அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முதல் 100 இடங்களில் 63 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. முதல் 15 இடங்களில் 10 இடங்களை இந்திய நகரங்களே இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டு சென்னையைத் தவிர டெல்லி, கொல்கத்தா, மும்பை, ஐதராபாத், பெங்களூரு ஆகிய மெட்ரோ நகரங்களில் காற்று மாசு அளவு கணிசமாக அதிகரித்திருந்தது. அதேபோல் சுத்தமான காற்று உள்ள நகரங்களில் தமிழ்நாட்டின் அரியலூர் இடம்பெற்றுள்ளது.


வாகன உமிழ்வுகள், நிலக்கரி எரியும் மின் உற்பத்தி நிலையங்கள், தொழிற்சாலை கழிவுகள், சமையல் மற்றும் கட்டுமானத் துறைக்கான உயிரி எரிப்பு ஆகியவையே காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணம் என சொல்லபடுகிறது. கடந்த ஆண்டு நவம்பரில், கடுமையான காற்று மாசுபாடு காரணமாக டெல்லியைச் சுற்றியுள்ள பல பெரிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பல தொழிற்சாலைகள் முதல் முறையாக மூடப்பட்டன. காற்று மாசுபாட்டால் நிமிடத்துக்கு மூன்று பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.