பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து- வெடித்து சிதறிய 7 பேரின் உடல்கள்
Apr 1, 2025, 14:23 IST1743497617940
குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
![]()
குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் தீசா நகருக்கு அருகில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் ஏழு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தீப்பிடித்து கட்டிடத்தின் சில பகுதிகள் இடிந்து விழுந்ததே தொழிலாளர்கள் மரணத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற தீயணைப்புப் படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர். கட்டிடத்தின் இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


