மேற்கு வங்கத்தில் மின்னல் தாக்கி 3 குழந்தைகள் உட்பட 7 பேர் பலி

 
பீகாரில் இன்று இடி மின்னல் தாக்கியதில் 83 பேர் உயிரிழப்பு!

மேற்கு வங்க மாநிலத்தில் மின்னல் தாக்கி 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு மால்டா உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மற்றும் மின்னல்களின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது. இந்த நிலையில், மின்னல் தாக்கி மால்டா மாவட்டத்தில் 3 குழந்தைகள் உட்பட  பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பழைய மால்டா நகரில் ஒருவரும்,   கலியாசக் பகுதியில் 6 பேரும் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். மால்டா நகரில் உள்ள பங்கிதோலா பகுதியருகே உயர்நிலை பள்ளியில் மின்ன ல் தாக்கியதில், 12 மாணவ மாணவியர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
 
இதுதவிர, 9 கால்நடைகள் மின்னல் தாக்கி உயிரிழந்து உள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் மின்னல் தாக்கி 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்னல் தாக்கியதில் படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.