ஜம்மு-காஷ்மீர் அருகே 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!
May 9, 2025, 15:34 IST1746785044366
ஜம்மு-காஷ்மீர் அருகே பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் அருகே பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தீவிரவாத தாக்குதல் நடத்திய நிலையில், இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
ஜம்மு-காஷ்மீர் அருகே பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் உள்ள சாம்பாவில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்தனர். பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 7 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


