குஜராத்தில் கோர விபத்து - 9 பேர் சம்பவ இடத்திலேயே பலி

 
Gujarat Gujarat

குஜராத் மாநிலம் நவ்சாரி அருகே சொகுசு பேருந்து மிது சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்த நிலையில், 15 பேர் காயம் அடைந்தனர். 

குஜரத் மாநிலம் நவ்சாரி மாவட்டம் வெஸ்மா என்ற பகுதியில் இன்று அதிகாலை 4 மணி அளவில் சொகுசு பேருந்து ஒன்று சுமார் 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஆமதாபாத் - மும்பை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக கூறப்படுகிறது. மேலும் 15 பேர் இந்த விபத்தில் படுகாயம் அடைந்தனர்.   விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமத்தித்தனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததுள்ளார். மேலும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதேபோல் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.