கோவில் சுவர் இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழப்பு! ஆந்திராவில் சோகம்

 
ச் ச்

விசாகப்பட்டினம் சிம்ஹாத்ரி அப்பன்ன சந்தனத்சவத்தில் அலங்காரம் காண வந்த பக்தர்கள் மீது சுவர் இடிந்து விழுந்ததில் 9 பக்தர்கள் பலியாகினர்.


ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சிம்மாச்சலம் அப்பன்ன சாமி கோயிலில்  மூலவர் வராஹ லட்சுமி நரசிம்ம சாமி. ஆண்டில் ஒருமுறை மட்டும் சுவாமி மூலவர் அணிவிக்கப்படும் சந்தனகாப்பு நீக்கப்பட்டு நீஜ ரூப தரிசனத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இதனால்  சிம்மாச்சலம் ஏற்கனவே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்த  வந்துள்ளனர். அதிகாலை ஒரு மணிக்கு  சுப்ரபாத சேவையுடன் நித்ய பூஜையுடன் தொடங்கியது.  பின்னர், மூலவர்  உடலில் இருந்த சந்தனக் கட்டை வெள்ளிச் கவசம் மிக நுணுக்கமாகப் பிரிக்கப்பட்டது. 

இதனையடுத்து நிஜ ரூபத்தில் இருந்த சாமிக்கு  சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. நித்ய பூஜைகளுக்கு பிறகு, கோயிலின் பரம்பரை அறங்காவலர் பூசபதி அசோக் கஜபதிராஜு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நிஜ ரூப தரிசனம் வழங்கப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில், அவர்கள் முதல் சந்தனத்தை  காணிக்கையாக செலுத்தினர். பின்னர், மாநில அரசு சார்பாக, வருவாய்த்துறை அமைச்சர் அங்கானி சத்ய பிரசாத் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சார்பில்  பட்டு வஸ்திரம் வழங்கினர். இந்த நிலையில்  நிஜ ரூப  தரிசனத்தை காண  காண வந்த பக்தர்கள் மீது சுவர் இடிந்து விழுந்ததில் ஒன்பது பேர் இறந்தனர். பலர் காயமடைந்தனர். 

செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு சிம்மாச்சலத்தில் பலத்த மழை பெய்தது. பேருந்து நிலையத்திலிருந்து கோயிலுக்கு மேலே செல்லும் வழியில் உள்ள ஷாப்பிங் வளாகத்தில் அமைக்கப்பட்டுருந்த ரூ.300 சிறப்பு தரிசன வரிசையில்  டிக்கெட் வாங்க காத்திருந்தவர்கள் மீது சுவர் இடிந்து விழுந்தது. இதில் 9 பேர் இறந்தனர். பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக் கொண்டனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் அதிகாரிகளும் உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். உள்துறை அமைச்சர் வாங்கலபுடி அனிதா, விசாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஹரேந்திர பிரசாத், காவல் ஆணையர் ஷங்கபிரதா பாக்சி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். 9 உடல்கள் விசாகப்பட்டினம் கேஜிஹெச் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்துக்கு காரணமான சுவர் 20 நாட்களுக்கு முன்பு இந்த சந்தன உற்சவத்திற்காக பிரத்யேகமாக கட்டப்பட்டது. மலை மீது உள்ள அப்பன்ன சுவாமி கோயிலில் இந்த ஒரு நாளில் 1.5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு அதற்கேற்ப ஏற்பாடுகள் செய்ததாக அதிகாரிகள் கூறி வந்தனர். இதற்காக சாமி தரிசனத்திற்காக  மலை மீது உள்ள பேருந்து நிருத்தத்தில்  இருந்து கோயிலுக்கு செல்லக்கூடிய மேடான பகுதிக்கு ரூ.300 க்கான வரிசை அமைக்கப்பட்டது. அதிகாலை 5 மணிக்கு சாமி சுவாமி தரிசனத்திற்கு  அனுமதிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்காக இந்த டிக்கெட்டுகளை பெற இரவு முழுவதும் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். இந்த வரிசையை ஓட்டி 20 நாட்களில் சுவர் கட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் அதிகாலை 3 மணி அளவில் சுமார் 40 நிமிடங்கள் தொடர்ந்து பலத்தப்காற்றுடன் மழை பெய்தது. இதனால்  தொடர்ந்து மழைநீர்  சுவரை ஒட்டி சென்றதால் மண்ணரிப்பு ஏற்பட்டு சுவர் இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.