உச்சநீதிமன்ற வளாகத்தில் திடீர் தீ விபத்து - பெரும் பரபரப்பு

 
supreme court

டெல்லியில் உள்ள உச்சநீதிமன்ற வளாகத்தில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்திய உச்ச நீதிமன்றம் இந்தியாவின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட நீதிமன்றமாகவும், கீழ்நீதிமன்றங்களின், உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்யும் நீதிமன்றமாகவும் செயல்படுகின்றது. இது ஒரு மேல்முறையீட்டு நீதிமன்றமாகையால், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் தன்னுடைய முதல் அமர்வை சனவரி 28, 1950 துவங்கியது. அன்று முதல் 24,000 மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்ப்புரைகள் வழங்கியுள்ளது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற வளாகத்தில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உச்சநீதிமன்ற வளாகத்தில் வங்கி ஒன்று செயல்பட்டு வரும் நிலையில், அந்த வங்கியில் இன்று காலை 9.20 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உச்சநீதிமன்ற வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் நாடும் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.