டெல்லி மாநகராட்சியை கைப்பற்றுகிறது ஆம் ஆத்மி? - 75 வார்டுகளில் வெற்றி, 60ல் முன்னிலை

 
aap aap

டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி 75 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளதோடு, 60 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 

250 வார்டுகளை கொண்ட டெல்லி மாநகராட்சிக்கு கடந்த நான்காம் தேதி தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் 50 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் ஆணையும் அறிவித்து இருந்தது. இதேபோல் தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது போல இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதோடு, 60 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதன் காரணமாக ஆம் ஆத்மி கட்சி டெல்லி மாநகராட்சியை கைப்பற்றும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  250 வார்டுகளை கொண்ட டெல்லி மாநகாட்சி தேர்தலில் 126 இடங்கள் பெருமான்மைக்கு தேவை என்பது குறிப்பிடதக்கது. 

aravind

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போது 125 வார்டுகளுக்கு மேல் முன்னிலையில் இருந்த பாஜக தற்போது பின் தங்கியுள்ளது. 55 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பாஜக, 48 வார்டுகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. கடந்த முறை மாநகராட்சியை கைப்பற்றிய பாஜகவிற்கு இது  பின்னடைவாக பார்க்கப்படுகிறது.  இதேபோல் காங்கிரஸ் 4 வார்டுகளில் மட்டுமெ வெற்றி பெற்றுள்ளதோடு, 5 வார்டுகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.