"மானசரோவர் புனித தலத்திற்கு இனி உத்தரகாண்ட் வழியாக செல்லலாம்" - நிதின் கட்கரி தகவல்!!

 
tn

மானசரோவருக்கு  இனி உத்தரகாண்ட்  வழியாக செல்லலாம் என்று மத்திய அமைச்சர்  நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 
tn

சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய திருத்தலங்களுக்கு பக்தர்கள் இந்தியாவிலிருந்து  புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.. இந்த சூழலில் நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மானசரோவர் புனித தலத்திற்கு இனி சீனா மற்றும் நேபாளம் வழியாக பயணம் மேற்கொள்ள வேண்டியது இருக்காது என்றும் இந்தியர்கள் விரைவில் உத்தரகாண்ட் வழியாக மானசரோவருக்கு செல்வர் என்றும் தெரிவித்தார்.

tn

மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரான நிதின் கட்கரி , ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்கள் கைலாச மானசரோவர் புனித யாத்திரை மேற்கொள்வதாகவும் , இமயமலை உச்சியில் 19 ஆயிரம் அடி உயர மலைப்பகுதியில் பக்தர்கள் நடைபயணமாக நடந்து சென்று தரிசனம் செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.  இதன்காரணமாக வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த யாத்திரைக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் செப்டம்பர் வரை இரண்டு வெவ்வேறு பாதைகள் வழியாக நடத்துகிறது என்றும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

nitin

தொடர்ந்து பேசிய அவர்,  அவசர காலத்தில் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தரக்தரையிறங்கக் கூடிய வசதிகளுடன் 28 நெடுஞ்சாலைகள் நெடுஞ்சாலைகளை கட்டமைத்து வருவதாகவும்,  டிசம்பர் 2023 சீனா மற்றும் நேபாளம் வழியாக மானசரோவருக்கு செல்லாமல் ,உத்தரகாண்ட் வழியாக இந்தியர்கள் சென்று பார்வையிட முடியும் என்றும் உறுதி தெரிவித்தார். உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகரில் பாதை அமைக்கப்பட்டு  வருகிறது.  இந்த புதிய வழித்தடத்தில் பயண நேரம் வெகுவாகக் குறையும். சுமுகமாக பயணிக்கலாம் என்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் ஜம்மு-காஷ்மீரில் சாலை இணைப்பை விரிவுபடுத்தி வருகிறது என்றும் குறிப்பிட்டு பேசினார். அத்துடன் இது ஸ்ரீநகர் மற்றும் டெல்லி இடையே பயண நேரத்தை கணிசமாக குறைக்கும் என்றும் இத்திட்டங்களுக்கு  7000 கோடி செலவாகும் என்றும் தெரிவித்தார்.