நடிகை ஜீவிதா ராஜசேகருக்கு உடல்நலக்குறைவு - இரண்டு நீதிமன்றங்களிலும் ஆஜராகவில்லை

 
jஎ

 நடிகை ஜீவிதா ராஜசேகர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் நகரி மற்றும் திருவள்ளூர் நீதிமன்றங்களில் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.  ஆனால் வரும்   ஜூன் 17ஆம் தேதி கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று நகரி நீதிமன்றமும்,  ஜூலை 7ஆம் தேதி கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று திருவருள்ளூர் நீதிமன்றமும் உத்தரவிட்டிருக்கிறது.

 இதுதாண்டா போலீஸ் படம் மூலம் தமிழில் மிகப் பிரமாதமான நடிகரானவர் ராஜசேகர்.  தெலுங்கு திரையுலகில் முன்னனி நடிகரான இவர் நடிகை ஜீவிதாவை திருமணம் செய்து கொண்டார்.   13 கோடி ரூபாய் செக் மோசடி வழக்கில் ஆந்திர மாநிலத்தின் நகரி நீதிமன்றத்தில் கடந்த 27 ஆம் தேதி அன்று ஜீவிதா ராஜசேகர் ஆஜராகவில்லை.  

ஜென்

 அவரது வழக்கறிஞர் முருகன் மட்டும் ஆஜராகி விளக்கமளித்திருந்தா.   அன்னமய்யா மாவட்டத்தைச் சேர்ந்த கோடீஸ்வர ராவ்- ஹேமா தம்பதியர் கடந்த 2021 ஆம் ஆண்டில் ஏப்ரல் 21ஆம் தேதி அன்று வழங்கிய காசோலை பவுன்ஸ் ஆனதால் ஜீவிதா ராஜசேகர் மீது நகரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது .விசாரணைக்கு 27ஆம் தேதி ஆஜராகாத நிலையில் ஜீவிதா ராஜசேகருக்கு உடல் நலக்குறைவு என்று கொரோனா என்றும் சான்றை சமர்ப்பித்து இருக்கிறார்.

 மருத்துவமனையின் அந்த சான்றினை ஏற்காத நீதிமன்றம் அவர் கட்டாயம் ஜூன் 17ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.   திருவள்ளுவர் நீதிமன்றத்தில் இருக்கும் விரைவு நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகும் படி தெரிவிக்கப்பட்டு இருந்தது.  அப்படி ஆஜராகாமல் போனால் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்படும் நிலை உருவாகும் என்று எச்சரிக்கை பட்டிருந்தது.

 அப்படி இருந்தும் திருவள்ளுவர் நீதிமன்றத்தில் ஜீவிதா ஆஜராகவில்லை.   இதையடுத்து வரும் ஜூலை 7ஆம் தேதி மற்றும் ஆந்திர மாநிலம் மகாராஜபுரம் பகுதியில் நிலம் பத்திரம் மோசடி உள்ளிட்ட புகார்கள் ஆந்திர மாநிலம் நகரி, திருவள்ளூர் நீதிமன்றங்களில் அளிக்கப்பட்டிருக்கிறது.  விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோடீஸ்வரர் ராவ் தம்பதியினர் திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளிடம் புகார் அளித்துள்ளனர் .

திருவள்ளூர் ஹெச்டிஎஃப்சி வங்கி காசோலை 13 கோடி ரூபாய் பணம் என்று அழைக்கப்பட்ட வழக்கில் உடல் நலக்குறைவு காரணம் காட்டி ஜீவிதா ஆஜராகவில்லை. இதுவரை இரண்டு முறை மட்டுமே நீதிமன்றத்தில் ஜீவிதா ராஜசேகர் ஆஜராகி விளக்கம் அளித்திருக்கிறார்.  10 முறைக்கு மேல் அவர் ஆஜராகாமல் உள்ளார் என்று கூறுகின்றனர் எதிர் தரப்பினர்.