அம்பேத்கர் நினைவு நாள் : நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி, ஜனாதிபதி அஞ்சலி..

 
அம்பேத்கர் நினைவு நாள் : நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி, ஜனாதிபதி அஞ்சலி..

சட்ட மாமேதை அம்பேத்கரின் 66வது நினைவுநாளையொட்டி,  நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள  அவரது திருவுருவ படத்துக்கு  குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி செலுத்தினர்.

இந்தியாவின் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் 66-வது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.  டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அண்ணல் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு குடியரசு தலைவர்  திரௌபதி முர்மு  மரியாதை செலுத்தினார்.  அவரை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா,  மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே  உள்ளிட்டோரும்  மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  

அம்பேத்கர்

இந்த நிகழ்ச்சியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி,  காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த  நிகழ்ச்சியில் புத்த பிக்குகள் கலந்து கொண்டனர்.  அதேபோல் உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.  தமிழகத்தில் ராஜ்பவனில் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்து  மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.