ஆந்திராவில் புதிதாக 13 மாவட்டங்கள் உதயம் - முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்

 
Andhra

ஆந்திராவில் புதிதாக 13 மாவட்டங்கள் புதிதாக உதயமாகின. புதிய மாவட்டங்களை அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.  

ஆந்திராவில் தற்போது வரை ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர், நெல்லூர், பிரகாசம்,அனந்தபுரம் ,கர்நூல், கடப்பா, சித்தூர் ஆகிய 13 மாவட்டங்கள் உள்ளன. நிர்வாக காரணங்களுக்காக ஆந்திராவில் மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க  ஓய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி த26 இருபத்தி ஆறு மாவட்டங்களாக மாற்றியமைக்க அரசாணையை மாநில அரசு வெளியிடப்பட்டது.

Andhra

அதன்படி புதிதாக மண்யம், அல்லூரி சீதாராம ராஜு, அனகாப்பள்ளி,காக்கிநாடா,கோனசீமா, ஏலூரு,என்.டி.ஆர் மாவட்டம், பாபட்லா, பல்நாடு, நந்தியாலா, ஸ்ரீசத்யசாய், அன்னமய்யா, மற்றும் ஸ்ரீ பாலாஜி ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புதிதாக பெயரிடப்பட்டு அமைய இருக்கும்  மாவட்டங்களில் ஸ்ரீபாலாஜி மாவட்டம் திருப்பதியை மாவட்ட தலைநகராகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 

jegan


 
புதிய மாவட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி குண்டூர் மாவட்டம் டெடப்பள்ளி பகுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி 13 மாவட்டங்களுக்கான செயல்பாடுகளை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதன் மூலம் தற்போது ஆந்திராவில் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. பாலாஜி மாவட்டத்தின்  ஆட்சியராக ஐ.ஏ.எஸ் அதிகாரி  வெங்கட்ரமணா ரெட்டியும், மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பரமேஸ்வர ரெட்டியும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.