ஸ்வப்னா சுரேஷ் வெளியிட்ட ஆடியோ - ஆடிப்போன பினராயி விஜயன்

 
sw

தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் வெளியிட்ட ஆடியோவால் கேரள அரசியல் களம் சூடாகி கிடக்கிறது.

  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடந்து வருகிறது.  தங்க கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயன் பெயர் அடிபட்டுள்ளதால் கேரள அரசியலில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.  

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மேற்கு ஆசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம் வழியாக கடத்தப்பட்ட 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.   இது தொடர்பாக தூதரக முன்னாள் ஊழியர்கள் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப், சரீத் மற்றும் மாநில அரசின் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

su

 இந்த நிலையில் தங்க கடத்தலில் கேரள முதல்வர் பினராயி விஜயன்,  அவரது குடும்பத்தினர் , முன்னாள் அமைச்சர் ஜலீல் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார் ஸ்வப்னா.   இதை அடுத்து தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் ஸ்வப்னா தெரிவித்திருக்கிறார்.

இந்த தங்கக் கடத்தல் வழக்கில் முதல்வரின் மனைவி கமலா, மகள் வீணா,  முதல்வரின் முன்னாள் தனிச் செயலாளர் ரவீந்திரன் , முன்னாள் அமைச்சர் ஜலில்,  நளினி நெட்டோ ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் என்னென்ன செய்துள்ளனர் என்பது குறித்தும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார் ஸ்வப்னா சுரேஷ் . இதையடுத்து பிரியாணி பாத்திரத்தில் முதல்வர் தங்கம் கடத்தியதாக புகார் எழுந்தது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.   பினராயி விஜயன் ராஜினாமா செய்து நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.

 தன் மீதான புகார்களை பினராயி விஜயன் மறுத்து இருக்கிறார்.  ஆனால் கேரள முதல்வருக்கு தங்க கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக சொப்பன ஸ்வப்னா சுரேஷ் சொன்னதை அடுத்து முதல்வர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ்- பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

pi

 இந்த நிலையில் சப்னா சுரேஷ் தங்க கடத்தல் தொடர்பாக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.   இந்த ஆடியோவில் பினராயி விஜயனுக்கு நெருக்கமானவராக ஷாஜ் கிரண் என்பவரும் ஸ்வபனா சுரேஷ் பேசும் ஆடியோ அது.  அதில் பேசும் ஷாஜ்,   நீதி மன்றத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் வாக்குமூலம் அளித்தது ஏன்? தங்க கடத்தல் விவகாரத்தில் அவருடைய குடும்பத்தினருக்கும் தொடர்பு இருக்கிறது என்ற குற்றச்சாட்டை பினராயி விஜயன் சகித்துக்கொள்ள மாட்டார்.  இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சொல்கிறார்.

ஆனால்,  இந்த ஆடியோவில் திருத்தம் செய்யயப்பட்டு  இருக்கிறது ஆனால் ஸ்வப்னா சுரேஷ் மீது ஆடியோவில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.   உண்மையான ஆடியோவை தான் வெளியிடும்போது அதை கேட்டால் மட்டுமே உண்மை புலப்படும் என்கிறார் ஷாஜ் கிரண்.