பாஜக நிர்வாகி சோனாலி போகத் மாரடைப்பால் மரணம்

 
tn

ஹரியானா பாஜக நிர்வாகி சோனாலி  போகத் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 43.

tn

கடந்த 2006 ஆம் ஆண்டு டிவி தொகுப்பாளனியாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் சோனாலி போகத் . பின்னர் இவர் டிக் டாக் செயலி மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். இதையடுத்து கடந்த 2008 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த இவர் ஹரியானாவில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் ஆதம்பூர் தொகுதியில்  போட்டியிட்டார்.  ஆனால் இவர் காங்கிரஸ் பிரமுகர் காங்கிரஸ் பிரமுகர் குல்தீப் பிஷ்ணோயிடம் தோல்வியை தழுவினார்.

tn
இருப்பினும் ஹரியானாவில் பாஜக நிர்வாகியாக வலம் வந்த இவர் சமீபத்தில் கோவா சென்றிருந்தார்.  இந்த சூழலில் கோவாவில் மாரடைப்பு ஏற்பட்டு சோனாலி போகத் உயிரிழந்துள்ளார்.  2019 ஆம் சட்டமன்ற தேர்தலில் சோனாலியை எதிர்த்து போட்டியிட்ட குல்தீப் கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.  இதனால் சோனாலி போகத்தை ஆதம்பூர் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட  திட்டமிட்டு வந்த  நிலையில் அவர் மரண செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோனாலி போகத் கடந்த 2020 ஆம் ஆண்டு அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.