அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை..

 
bank

அக்டோபர் மாதத்திற்கான வங்கி விடுமுறைப் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

பணம் செலுத்துவது, எடுப்பது,  கடன்பெறுவது என பெரும்பாலும் பணத்தேவைக்காக மக்கள் வங்கியை நாடுவது வழக்கம்.. ஆனால்  வங்கிகளுக்கு   இரண்டாவது சனி ,ஞாயிற்றுக்கிழமை,  நான்காவது சனி,  மற்றும் மாநில விடுமுறைகள் , உள்ளூர் விடுமுறைகள் என பல விடுமுறை நாட்கள் உள்ளது . அந்தவகையில் ஒவ்வொரு மாத முடிவின் போதும் அடுத்த மாதத்திற்கான விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. இதனால்  வாடிக்கையாளர்கள் வங்கி விடுமுறைகளை கருத்தில் கொண்டு, வங்கிக் கிளைகளில் பணத்தை எடுக்க மற்றும் டெபாசிட் செய்யும் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளலாம்.   

bank
 
அந்த வகையில் செப்டம்பர்  மாதம் இன்றுடன்  முடிய  உள்ள நிலையில், அக்டோபர்  மாதத்திற்கான  விடுமுறை பட்டியலில் பொது விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் விடுமுறை என கணக்கிட்டு விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  அந்தவகையில் காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி என  வேறு எந்த  மாதத்திலும் இல்லாத அளவிற்கு இந்த அக்டோபரில், 21 நாட்கள் வங்கிக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது.  நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை என்பதை பார்க்கலாம்.

“அக்டோபர் 1 -  வங்கிக் கணக்குகளின் அரையாண்டு நிறைவு (கேங்டாக்)

அக்டோபர் 2- காந்தி ஜெயந்தி மற்றும் ஞாயிறு விடுமுறை
 
அக்டோபர் 3 - துர்கா பூஜை (அகர்தலா, புவனேஸ்வர், கவுகாத்தி, இம்பால், கொல்கத்தா, பாட்னா மற்றும் ராஞ்சி)

அக்டோபர் 4 - ஸ்ரீமந்த சங்கரதேவரின் துர்கா பூஜை/தசரா/ஆயுத பூஜை/ஜன்மோத்சவ் (அகர்தலா, பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, காங்டாக், குவஹாத்தி, கான்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, பாட்னா, ராஞ்சி, ஷில்லாங் மற்றும் திருவனந்தபுரம்)

அக்டோபர் 5 - ஸ்ரீமந்த சங்கரதேவரின் துர்கா பூஜை/தசரா/ஜன்மோத்சவ்

அக்டோபர் 6 - துர்கா பூஜை (காங்டாக்)

அக்டோபர் 7 - துர்கா பூஜை (காங்டாக்)

bank

அக்டோபர் 8 - இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை மற்றும் மிலாத்-இ-ஷெரிப்/ஈத்-இ-மிலாத்-உல்-நபி (முஹம்மது நபி பிறந்த நாள்) (போபால், ஜம்மு, கொச்சி, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரம்)

அக்டோபர் 9 - ஞாயிறு

அக்டோபர் 13- கர்வா சௌத் (சிம்லா)

அக்டோபர் 14 - ஈத்-இ-மிலாத்-உல்-நபி (ஜம்மு மற்றும் ஸ்ரீநகர்) அடுத்து வரும் வெள்ளிக்கிழமை

அக்டோபர் 16 - ஞாயிறு

அக்டோபர் 18 - கதி பிஹு (கவுகாத்தி)

அக்டோபர் 22 - நான்காவது சனிக்கிழமை

அக்டோபர் 23 - ஞாயிறு

அக்டோபர் 24 - காளி பூஜை/தீபாவளி

அக்டோபர் 25 - லக்ஷ்மி பூஜை/தீபாவளி/கோவர்தன் பூஜை (காங்டாக், ஹைதராபாத், இம்பால் மற்றும் ஜெய்ப்பூர்)

அக்டோபர் 26 - கோவர்தன் பூஜை/பாய் தூஜ்/தீபாவளி/விக்ரம் சம்வந்த் புத்தாண்டு தினம் (அகமதாபாத், பேலாபூர், பெங்களூரு, டேராடூன், காங்டாக், ஜம்மு, கான்பூர், லக்னோ, மும்பை, நாக்பூர், சிம்லா மற்றும் ஸ்ரீநகர்)

அக்டோபர் 27 -  பாய் தூஜ்/லட்சுமி பூஜை/ தீபாவளி (காங்டாக், இம்பால், கான்பூர் மற்றும் லக்னோ)

 அக்டோபர் 30 - ஞாயிறு

அக்டோபர் 31 - சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள்/சூர்ய பஷ்டி தலா சாத்/சத் பூஜை (அகமதாபாத், பாட்னா மற்றும் ராஞ்சி)

வங்கி விடுமுறை நாட்களிலும்  ஆன்லைன் இணைய வங்கி சேவைகள் வழக்கம்போல் கிடைக்கும் என  வங்கிகள் தெரிவித்துள்ளன.