பீகார் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு

 
bihar blast

பீகாரில் வீட்டில் வைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் இடிபாடுகளில் சிக்கி 14 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 9 பேர் படுகாயம் அடைந்தனர். 
 
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்திலுள்ள கஜ்வாலிஜாக் பகுதியில் உள்ள குடியிருப்பில் நள்ளிரவில், பயங்கர வெடி சப்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்த பரிதாபமாக நிலையில், 9 பேர்படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

bihar blast

இந்நிலையில், குடியிருப்பு பகுதியிலுள்ள ஒரு வீட்டை சேர்ந்த மகேந்திர மண்டல் என்பவர் சட்டவிரோதமாக வீட்டில் வைத்து குடும்பத்தினருடன் சேர்ந்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட போது எதிர்பாராத விதமாக பட்டாசுகள் உராய்வு ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் மகேந்திர மண்டல் மற்றும் அவரது குடும்பத்தினர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

bihar


 
அதுமட்டுமின்றி அக்கம் பக்கத்திலுள்ள குடியிருப்புகளும் இடிந்து சேதமடைந்ததால், எதுவும் அரியாத அவர்களும் இந்த வெடிவிபத்தில் உயிரிழந்துள்ளனர். 
வெடிவிபத்து நடைபெற்ற இடத்தில் ஏராளமான வீடுகள் இடிந்து சேதமாகியுள்ள நிலையில், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட்டுள்ளனர். படுகாயம் அடைந்தவர்களில் ஒருசிலர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.