டெல்லி துணை முதலமைச்சர் வீட்டில் நடந்து வந்த சிபிஐ சோதனை நிறைவு

 
manish

டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா வீடு உள்ளிட்ட 15 இடங்களில் 14 மணி நேரத்திற்கு மேலாக சிபிஐ அதிகாரிகள் நடத்தி வந்த சோதனை நிறைவடைந்தது. 
 
டெல்லியில் புதிய மது கொள்கையை அமல்படுத்துவதில் முறைகேடு என்று பாஜக குற்றம்சாட்டியதை அடுத்து சிபிஐ வழக்கு பதிவு செய்தது. மது விற்பனை உரிமம் வழங்கும் நடைமுறையை மாற்றி, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டில் சிபிஐ அதிகாரிகள் நேற்று டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா வீடு உள்ளிட்ட 15 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். 14 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனை இன்று காலை நிறைவடைந்தது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், சோதனை நிறைவடைந்ததையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியதாவது: ஆம் ஆத்மி அரசின் நல்ல செயல்களை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. இதற்கெல்லாம் அஞ்சுபவர்கள் அல்ல நாங்கள். 14 மணி நேரம் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள் எனது கணினி, தொலைபேசி மற்றும் சில கோப்புகளை கைப்பற்றி எடுத்துச்சென்றுள்ளனர். இவ்வாறு கூறினார்.