உதய்பூர் படுகொலை - தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்த உத்தரவு

 
NIA

ராஜஸ்தான் மாநிலா உதய்பூரில் டெய்லர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது
.

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவிற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியது. தனைத் தொடர்ந்து நாடு முழுவதும் நூபுர் சர்மாவைக் கைது செய்யக்கோரி இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நூபுர் சர்மாவின் புகைப்படத்தை முகநூல் முகப்புப் படமாக வைத்திருந்த டெய்லர் ஒருவர் இரண்டு இஸ்லாமியர்களால் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டார். உதய்பூர் மால்தாஸ் தெருவில் உள்ள பூத்மஹால் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நூபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை எழுதியிருந்ததாகவும் கூறப்படுகிறது. கொலை செய்வதற்கு முன்பும் பின்பும் அதை வீடியோவாக எடுத்து கொலையாளிகள் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் யாரேனும் நுபுர் சர்மாவிற்கு ஆதரவு அளித்தால் அவர்களுக்கும் இதே நிலைதான் என எச்சரிக்கும் விதமாக ஆயுதங்களை காண்பித்து அந்த வீடியோவில் தெரிவித்துள்ளனர்.  

nia

கொலையாளிகள் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையிலும், இந்த சம்பவம் காரணமாக ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில்,  அவர்களிடம் சர்வதேச தொடர்புகள் குறித்து என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த கொடூர கொலைக்கு பின்னணியில் ஏதேனும் அமைப்புகள் உள்ளனவா? அல்லது சர்வதேச தீவிரவாத குழுக்கள் தொடர்புகள் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என கூறப்படுகிறது.