இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்திருப்பது உறுதிதான் - இந்திய வெளியுறவுத் துறை விளக்கம்..

இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்திருப்பது உறுதிதான் -  இந்திய வெளியுறவுத் துறை விளக்கம்..

லடாக் எல்லையில் இந்திய பகுதியை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்திருக்கிறார்.  

இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்திருப்பது உறுதிதான் -  இந்திய வெளியுறவுத் துறை விளக்கம்..

கிழக்கு லடாக்கில் உள்ள பான்காங் பகுதியில் சீனா பாலம் ஒன்றை கட்டி வருகிறது. இந்த பாலத்தின் வழியாக ஆயுதம் தாங்கிய கன்ரக வாகனங்கள் எளிதாக  இந்திய எல்லைக்கு வரலாம்.. இது எந்த வகையில் சீனாவுக்கு சாதகமாகவே அமையும்..  இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த  வெளியுறவுத்துறை செய்தித்தொட்ர்பாளர் அரிந்தம் பாக்சி, சீனா கட்டியுள்ள இந்த புதிய பாலம் , ஏற்கனவே கட்டப்பட்டிருக்கும்  முதல் பாலத்தின் விரிவாக்கமாக இருக்கலாம் என்று கூறினார்.  கடந்த ஏப்ரல் மாதம் இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவுபெற்றிருக்கின்றன.  

இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்திருப்பது உறுதிதான் -  இந்திய வெளியுறவுத் துறை விளக்கம்..

 சீனாவின் நகர்வுகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ள அரிந்தம் பாக்சி,  பான்காங் ஏரி பகுதியில் இந்திய பகுதியை  சீனா  ஆக்கிரமிப்பு செய்திருப்பது உறுதி தான் என்று கூறியுள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்  ,   எல்லையில் பயங்கரவாதத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியதாகவும் ,  அரிந்தம் பாக்சி சுட்டிக் காட்டினார். மேலும்  கொரோனா காரணமாக  சீனாவில் இருந்து தாயகம்  திரும்பிய மாணவர்கள், மீண்டும் சீனா சென்று கல்வியை தொடர அந்நாட்டு அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.