சித்ரா ராமகிருஷ்ணன் வீட்டில் ரெய்டு! ஊழல்களுக்கு பின்னணியில் இருந்தது யார்?

 
c

 தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணன் வீடு மற்றும் அவருக்கு தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.   ஊழல்களுக்கு பின்னணியில் இருந்தது யார்?  என்பது குறித்த விசாரணையும் நடந்து வருகிறது.

 மும்பையில் உள்ள தேசிய பங்குச் சந்தையின் தலைமை அலுவலகத்தில் தலைமை அதிகாரியாக பணி புரிந்தவர் சித்ரா ராமகிருஷ்ணன்.   அவர் பணிபுரிந்த காலத்தில் தேசிய பங்குச் சந்தையில் முறைகேடாக பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் நடந்துள்ளன என்றும், அதுமட்டுமல்லாமல் பல இடைத்தரகர்கள் பயனடையும் வகையில் பங்குச் சந்தையின் விதிமுறைகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ck

 இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி,  சித்ரா ராமகிருஷ்ணனுக்கு ஏற்கனவே அவர் அபராதம் விதித்தது .  மேலும்,  விதிகளை மீறி தலைமை செயல்பாட்டு அதிகாரியாக ஆனந்த் சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டதாகவும்  குற்றச்சாட்டு எழுந்தது. 

 இந்த நிலையில் தற்போது மும்பையில் இருக்கும் சித்ரா ராமகிருஷ்ணனின் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  ஊழல்களுக்கு எல்லாம் பின்னணியில் இருந்தது யார் யார்?  பரிந்துரையின் அடிப்படையில் பதவி உயர்வு பதவி மாற்றங்களை அவர் வழங்கினார் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

 இத்தனை ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டிருந்த போதிலும் சித்ரா ராமகிருஷ்ணன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர் ராஜினாமா செய்வதற்கு எந்தவித பிரச்சனையுமின்றி பங்குச்சந்தையை விட்டு வெளியேற உதவியது யார் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது என்றனர்.