கேஸ் சிலிண்டர் விலை உயர்வு மத்திய அரசின் புத்தாண்டு பரிசு - காங்கிரஸ் கண்டனம்

 
congress congress

வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. 

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை கடந்த சில மாதங்களாக குறைக்கப்பட்டு வந்த நிலையில், 2023ம் ஆண்டின் முதல் நாளிலேயே ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டு தொடங்கியுள்ள நிலையில், ஜனவரி மாதத்துக்கான எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இதில், வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் விலை ரூ. 25 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் ரூ.1,892க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை, இன்று முதல் ரூ.1,917க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இந்த விலையேற்றத்தால்,  உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் போன்ற வணிகம் சார்ந்த தொழில்கள் பாதிப்புகள் ஏற்படும் என்று பார்க்கப்படுகிறது.  வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்கள் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. 

இந்த நிலையில், வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கூறுகையில், புத்தாண்டின் பரிசுதான் இது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 25 உயர்ந்துள்ளது. இது ஒரு தொடக்கமே" என்று தெரிவித்டுள்ளது.