காங்கிரஸ் தலைவர் தேர்தல் : விறு விறு வாக்குப்பதிவு..

 
காங்கிரஸ் தலைவர் தேர்தல்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.  தேர்தலை பொருத்தவரை காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார்.   நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களே  காங்கிரஸ் கட்சியின் தலைவராக  இதுவரை இருந்து வந்ததாக  பல்வேரு  விமர்சனங்களும் எழுந்ததால்,  புதிய காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.   அந்த முடிவின்படி இன்று தேர்தல் நடைபெறும் என கடந்த மாதம் 22 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதே நேரம் விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியாங்கா காந்தி என  நேரு குடும்பத்தைச் சார்ந்த யாரும் தலைவர் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் தேர்தல்

ராகுல் காந்தி போட்டியிட்டு கட்சியினுடைய தலைவராக வருவார்  என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  இந்த அறிவிப்பு கட்சியினரிடையே   பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.  அத்துடன் நான்,  நீ என பல முன்னணி தலைவர்களும் தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்தனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜுன கார்கேவை தலைவராக  தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது.   இதனை அடுத்து அவர் தேர்தலில் போட்டியிட வேப்பமனு  தாக்கல் செய்தார்.  அதேபோல் கேரள மாநிலம் திருவனந்தபுரம்  காங்கிரஸ் எம். பி.,  சசிதருரும் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு  தாக்கல் செய்தார். இருவரும் கடந்த மாதம் 30 ஆம் தேதி தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.  

சோனியா காந்தி குடும்பம்

இருவருக்கும்  இடையே நேரடி போட்டி நிலவினாலும்,  நேரு குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் பல முன்னணி தலைவர்களின் ஆதரவு மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தான் இருந்தது.   ஆகையால் அவர்தான்  காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   இந்த சூழலில் இன்றைய தினம்  நாடு முழுவதும் 65 இடங்களில்  காங்கிரஸ் தலைவர் பதவிக்கான  வாக்குப்பதிவு நடைற்று வருகிறது.   மொத்தமாக  9,000  பேர் வாக்களிக்கும் உரிமையை பெற்றிருக்கின்றனர்.  தலைநகர் டெல்லியை பொருத்தவரை காங்கிரஸ் கட்சிகளின் தலைமை அலுவலகத்தில் வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது இங்கு தான் சோனியாகாந்தி, பிரியங்கா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட  முன்னணி தலைவர்கள் வாக்களிக்க உள்ளனர்.  

 மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில்,  பின்னர் வாக்குப்பெட்டிகள் தலைநகர் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டு நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்பட உள்ளது.  உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்பட்டு,  அதன் பின்னர் யார் தலைவர்கள் அறிவிப்பு வெளியாகும்.  1998 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார்.  கடந்த 24 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.