சோனியா காந்தி தலைமையில் கூடுகிறது காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம்!!

 
tn

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 28ம் தேதி சோனியா காந்தி தலைமையில் கூடுகிறது.

tn

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது . இதையடுத்து அக்கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து வந்த ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார்.  இதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். அத்துடன் காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை ஏற்க ராகுல் காந்தி மறுப்பு தெரிவித்துவிட்டார். இதன் தொடர்ச்சியாக நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அதிருப்தி தெரிவித்து சோனியாக விற்கு கடிதம் எழுதிய நிலையில்,  நேரு குடும்பத்தை சாராத ஒருவர் கட்சித் தலைவராக விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

rahul

இந்நிலையில்  காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. இக்கூட்டமானது சோனியாகாந்தி தலைமையில் காணொலி வாயிலாக நடைபெறுகிறது. 28ஆம் தேதி மாலை 3:30 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் உயர் அதிகாரம் கொண்ட செயற்குழு கூட்டம் நடைபெறும் நிலையில் கூட்டத்தில் புதிய தலைவர் தேர்தல் அட்டவணை இறுதியாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடத்தப்படும் தேதிகளுக்கு ஒப்புதல் அளிக்க செயற்குழு கூட்டம் கூடும்  நிலையில் அக்டோபர் மாதம் 15ம் தேதிக்குள் அடுத்த காங்கிரஸ் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

sonia
.
அத்துடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைகளுக்காக மகன் ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தியுடன் வெளிநாட்டுக்கு  செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடு செல்லும் ராகுல் காந்தி செப்டம்பர் 4ம் தேதிக்கு முன் இந்தியா திரும்பி விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.