"கொரோனா கட்டுப்பாடுகளை தொடர்ந்து பின்பற்றுங்கள்" - AICTE உத்தரவு!!

 
tn

கல்லூரி வளாகங்களில் மாணவர்கள் மாஸ்க் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அனைத்து தொழில்நுட்ப கல்வி நிலையங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கல்லூரிக்கு வரும் மாணவர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ள அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து  அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல் பின்வருமாறு :-

**தெர்மல் ஸ்கேனிங் மூலம் உடல் வெப்பநிலையை கல்லூரி மாணவர்களுக்கு கண்டறியவேண்டும்.  

**முக கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.

tn

**கிருமிநாசினி மூலம் கைகளை அவ்வப்போது சுத்தம் செய்து கொள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்

**மாணவர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்களிடையே சமூக இடைவெளி முறையாக  கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும்

**கல்வி நிறுவனங்களின் வளாகங்கள் மற்றும் மாணவர்களுக்கு பயன்படுத்தப்படும் பேருந்துகள் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்படவேண்டும் 

**மாணவர்கள் அல்லது ஊழியர்கள் யாரேனும் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு,  அவரை சார்ந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்

**பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கு தடை விதிக்க வேண்டும்

rn

**மாணவர்கள் அல்லது ஊழியர்களில் யாரேனும் குடும்பத்தில் யாராவது ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால் அந்நபரை கல்வி நிறுவனங்கள் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது.

** அனைவரும் கட்டாயம் ஆரோக்கிய செய்து செயலியைப் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும் 

**இந்தியாவில் படிப்பை படித்து வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் 

**கல்வி நிறுவனத்தின் வளாகத்தில் மாணவர்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் 

**பயன்படுத்தப்படும் முகக் கவசங்கள் உள்ளிட்டவற்றை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்