டெல்லியில் மீண்டும் ஆயிரத்தை தாண்டியது கொரோனா தினசரி பாதிப்பு..

 
corona

டெல்லியில் கொரோனா பாதிப்பு நேற்று ஓரே நாளில் 60 % அதிகரித்துள்ளது. நேற்று ஓரே நாளில் அங்கு புதிதாக 1,009 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

நாடு முழுவதும் கொரோனா 3 அலை படிப்படியாக குறைந்து வந்தது.  மக்கள் சற்று  நிம்மதிப் பெருமூச்சு விட்ட நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அத்துடன் ஜூன் மாதத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்றும், கொரோனா 4வது அலை உருவாகக்கூடும் என்றும்  நிபுணர்கள் கூறி வருகின்றன. அதனை உறதிப்படுத்தும் விதமாகவே தற்போது டெல்லி, ஹரியானா, மஹாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு கனிசமாக அதிகரித்து வருகிறது

Corona

.  இந்தியாவில் இன்று காலை 8 மணி வலையிலான கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,380 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.  நேற்றைய தினம் பாதிப்பு  2,067 ஆக இருந்த நிலையில், இன்றைய தினம் அது மேலும் அதிகரித்திருக்கிறது.அந்தவகையில் தலைநகர் டெல்லியில் மட்டும் நேற்று ஓரே நாளில் புதிதாக 1009 பேருக்கு  கொரோனா பாதிப்பு  கண்டறியப்பட்டுள்ளது. 

delhi

அங்கு நேற்று முந்தினம் வரை பாதிப்பு 632 ஆக இருந்த நிலையில் ஓரே நாளில் 60 % அதிகரித்துள்ளது.  டெல்லியில்  அதிகபட்சமாக  கடந்த பிப்ரவரி  மாதம் 10 ஆம் தேதி நிலவரப்படி தினசரி  பாதிப்பு 1,104 ஆக இருந்தது. அதன் பிறகு அதிகபட்ச தினசரி பாதிப்பாக நேற்று பதிவாகியிருக்கிறது.  அங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருப்பதால் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  மீறினால் 500 ரூபய் அபராதம விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.