கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் - சீனா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு..

 
கொரோனா நெகடிவ்

சீனா உள்ளிட்ட  நாடுகளில் இருந்து விமான மூலம் இந்தியா வரும் பயணிகள் அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா

சீனாவில் தற்போது பி.எஃப்- 7 என்கிற உருமாறிய கொரோனாவின் பரவல் மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவில் மீண்டும் கொரானா பேரலை ஏற்படாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.  அதன் ஒரு பகுதியாக உயிர் காக்கும் மருந்துகளின் இருப்பு, கொரோனா மருந்துகள் இருப்பு மற்றும் கருவிகள் தயாரிப்பு குறித்து மருந்து நிறுவனங்களிடம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா காணொளி காட்சி வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார்.  அப்போது பேசிய அவர், கொரோனா பரவலைத் தடுக்க உயிர் காக்கும் மருந்துகள் தயாரிப்பு,  இருப்பு மற்றும் சில்லறை வணிக அளவு,  விநியோக சங்கிலி ஆகியவற்றை துல்லியமாக கண்காணிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

மத்திய அரசு

சீனா,  ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர்,  தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகள் அனைவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா,  இந்த ஆறு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள்,  தாங்கள் புறப்படுவதற்கு முன்பாக ஏர்சபிதா என்கிற மத்திய சுகாதார துறையின் செயலியில், கொரோனா நெகடிவ் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று  குறிப்பிட்டுள்ளார்.