இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1500 ஆக குறைவு

 
india corona

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நீண்ட நாட்களுக்கு பின்னர் 1500 ஆக குறைந்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்திற்கு மேல் பதிவாகி வந்தது. இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பின்னர் தினசரி கொரோனா பாதிப்பு 1500 ஆக குறைந்துள்ளது.  நேற்று முன் தினம் 2,401  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று 2,060  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில்,  கடந்த 24 மணி நேரத்தில் 1,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,46,32,430 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 8 பேர் பலியான நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,913 ஆக உயர்ந்தது.

corona


 
கடந்த 24 மணி நேரத்தில்  1,919 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  4,40,77,068 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை  26,449 ஆக குறைந்துள்ளது. நாட்டில்  இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை  219 கோடியை தாண்டியுள்ளது.