தொடங்கியதா 4-வது அலை ? - டெல்லியில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா

 
corona

டெல்லியில் கடந்த 40 நாட்களில் இல்லாத அளவிற்கு தினசரி கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. அதாவது நேற்று டெல்லியில் சுமார் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று தொடர்ந்து பாதிப்பை ஏர்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.இதுவரை முதல் அலை ,இரண்டாம் அலை, மூன்றாம் அலை என பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே நான்காவது அலை ஜூலை மாதத்தில் வரக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் நேற்று ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் நான்காவது அலை வரக்கூடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. மூன்றாவது அலை தொடங்கியது போது டெல்லியில் தான் முதன் முதலில் அதிகமான கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 

corona

டெல்லியில் நேற்று புதிதாக 299 பேருக்கு தொற்று உறுதியானது. முந்தைய நாளை விட இது 50 சதவீதம் அதிகமாகும். கொரோனா பரவல் எண்ணிக்கையை அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், எக்ஸ்.இ. வகை புதிய மாறுபாடு கண்டறியப்படும் வரை பரவலை கண்டு அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் டெல்லி சுகாதார அமைச்சர் சத்தியேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.மருத்துவமனைகளை கண்காணித்து வருவதாகவும், பரவல் அதிகரித்தாலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர். குறைந்து வருவதாகவும் தெரிவித்தார்.