ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் - வீடுகள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி

 
earth earth

ஜம்மு காஷ்மீரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்து வீட்டைவிட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். 

ஜம்மு காஷ்மீர் மாநிலம்  ரேசாய் மாவட்டம் கத்ரா பகுதியில் இன்று காலை 7.52 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகி இருந்தது. இதனால் சில இடங்களில் வீடுகள் லேசான அதிர்வு ஏற்பட்டது. உடனடியாக மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இதேபோல் கடந்த மாதத்தில் ஜம்மு மண்டலத்தில் உள்ள தோடா, ரேசாய், கிஸ்ட்வா, உத்தம்பூர் மாவட்டங்களில் 13 முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலநடுக்கத்தில் உயிர் சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் தேசிய புவியியல் அதிகாரிகள் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.