அந்தமான்- நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்!!

 
earth

4.1 ரிக்டர் அளவுகோலில்  அந்தமான் நிகோபார் தீவுகளில்  நிலநடுக்கம்  உணரப்பட்டுள்ளது.

earth

வங்கக்கடல் பகுதியில் அமைந்துள்ள அந்தமான் தீவுகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்தமானின் போர்ட் பிளே நகரின் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4.1 ஆக பதிவாகியுள்ளது.  அதிகாலை 5.48  மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய புவியியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது.  இது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு  வடக்கு - வடகிழக்கு 220 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாகவும் தேசிய புவியியல் மையம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .

tn

இருப்பினும் இதனால் ஏதேனும் உயிரிழப்பு அல்லது பொருள் சேதம் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கம் போன்ற மிகப்பெரிய மாறுதல்களால் திடீரென கடல் நீர் மிகப்பெரிய அலைகளாக உருவெடுத்து கரை சேர்ந்து அங்கே பேரழிவுகளை ஏற்படுத்தும் . இவற்றை கடற்கோள் அல்லது ஆழிப்பேரலை என்று அழைப்போம். கடந்த 2004-ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில்   ஏற்பட்ட நிலநடுக்கம் சுனாமி என்று அழைக்கப்படும் ஆழிப்பேரலையை  உருவாக்கி பெரும் அதீத பாதிப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.